பிபிசி நட்சத்திர வீராங்கனை விருது பெற்ற தமிழ்நாட்டின் துளசிமதி முருகேசன்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீரரான துளசிமதி முருகேசன் பிபிசியின் இந்திய வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழாவில், பிபிசி நட்சத்திர வீராங்கனை விருது பெற்றார். அவர் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
பேட்மிண்டன் ஆடுவதற்கு தேவையான உபகரணங்களை கூட வாங்க முடியாத நிலையில் இருந்த அவர் , அரசு விளையாட்டரங்கில் தனது தந்தையிடம் பயிற்சிப் பெற்று சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.
இந்த விருதை பெறுவதற்கு தனது குடும்பத்துடன் வந்திருந்த அவர், இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று கூறியிருந்தார்.
அவரது விருது பெறும் தருணம், விருது பெற்ற பிறகு அவர் பேசியது காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



