காணொளி: நடிகர் அஜித் எதிர்கொள்ளும் தூக்கமின்மை பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா?
காணொளி: நடிகர் அஜித் எதிர்கொள்ளும் தூக்கமின்மை பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா?
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தன்னால் ஒரு நாளுக்கு நான்கு மணி நேரங்கள் மட்டுமே தூங்க முடிகிறது என்று அவர் கூறியிருந்தார்.
இது insomnia எனப்படும் தூக்கமின்மையாகும். இது பொதுவாக நமது அன்றாட வாழ்வின் பழக்கங்கள், செயல்களால் ஏற்படுகிறது என்றாலும், இதை உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு சீர் செய்யலாம். ஆரோக்யமான வாழ்க்கை முறையும் முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



