ரோம் நகரில் வெடித்த எரிவாயு டேங்கர், பரவிய தீ - காணொளி

காணொளிக் குறிப்பு,
ரோம் நகரில் வெடித்த எரிவாயு டேங்கர், பரவிய தீ - காணொளி

ரோம் - நேபிள்ஸ் நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் திரவ புரொப்பேன் எரிவாயுவை (liquid propane gas) ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் வெடித்தத்தில் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.

இந்த வாகனம் முன்னதாக ஒரு டிரக்குடன் விபத்தில் சிக்கியிருந்தது. டேங்கர் வெடிப்பதற்கு முன்பு, சுற்றியிருந்த பகுதியில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சாலைக்கும் சுற்றியுள்ள கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், பல மணி நேரங்களுக்குப் பிறகு அந்தப் பாதை மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு