மணிப்பூர் வாள்வீச்சு வீராங்கனைகளை அரவணைத்த தமிழ்நாடு
விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மணிப்பூரின் நிலையை தமிழ்நாடு கவலையோடும் வேதனையோடும் பார்ப்பதாக கடந்த ஜூன் 23ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சியளிக்க மணிப்பூரில் சாதகமற்ற சூழல் நிலவுவதால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் பயிற்சிகளை தொடரலாம் என அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்காக விண்ணப்பித்த தேசிய மற்றும் சர்வதேச வாள்வீச்சுப் போட்டிகளில் விளையாடி வரும் 10 வீரர்கள், 5 வீராங்கனைகள், 2 பயிற்சியாளர்கள் என மணிப்பூரைச் சேர்ந்த மொத்தம் 17 பேர் கொண்ட குழு, ஆகஸ்ட் 14ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.
இவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காலை, மாலை இரு வேளைகளில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
தயாரிப்பு: அஷ்ஃபாக்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



