தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு எப்படி நிகழ்ந்தது? முழுமையாகச் சரிசெய்ய எத்தனை நாட்கள் ஆகும்? - காணொளி
உலகம் முழுவதும் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பல்வேறு துறைகளின் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மெல்ல சரி செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் முற்றிலும் இயல்புநிலைக்கு திரும்ப மேலும் சில நாட்கள் ஆகலாம்.
இணைய பாதுகாப்பில் மிகவும் நம்பகமான மற்றும் மிகப்பெரிய நிறுவனமாக க்ரவுட் ஸ்ட்ரைக் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்துக்கு 24,000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பல லட்சம் கணினிகளின் பாதுகாப்பை இந்நிறுவனம் உறுதி செய்கிறது.
மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க உருவாக்கப்பட்ட ஃபால்கன் ஆண்டி-வைரஸ் ( Falcon antivirus software) மென்பொருளை புதுப்பித்த போது இந்த மாபெரும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறுகிறது.
இதன் பாதிப்பால் உலகம் முழுவதும், விமான சேவை, வங்கி சேவை, ஊடக ஒளிபரப்பு போன்றவை பாதிக்கப்பட்டது. விமான சேவைகளின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இந்த வார இறுதியில் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதும், அல்லது தாமதமாவதும் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இது எதனால் ஏற்பட்டது என்று தெளிவாக தெரியவில்லை. அதேசமயம் இது ஒரு சைபர் தாக்குதல் அல்ல எனவும் க்ரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை என்னென்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



