ஐடி சேவையில் திடீர் செயலிழப்பு; திணறும் உலகம் - என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, ஐடி சேவையில் திடீர் செயலிழப்பு; திணறும் உலகம் - என்ன நடக்கிறது?
ஐடி சேவையில் திடீர் செயலிழப்பு; திணறும் உலகம் - என்ன நடக்கிறது?

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த ஐடி செயலிழப்புக்கு க்ரவுட்ஸ்ட்ரைக் மற்றும் மைக்ரோசாஃப்ட்-ஐ நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த சேவை செயலிழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)