காணொளி: நீரில் மூழ்கிய பயிர்களை பார்த்து துடித்துப்போன விவசாயிகள்

காணொளிக் குறிப்பு, நீரில் மூழ்கிய பயிர்கள்.. துடித்துப்போன விவசாயிகள்
காணொளி: நீரில் மூழ்கிய பயிர்களை பார்த்து துடித்துப்போன விவசாயிகள்

பஞ்சாபின் சுல்தான்பூர் லோதி நகரில் தங்களது பயிர்கள் நீரில் மூழ்குவதை பார்த்து விவசாயிகள் செய்வதறியாது நின்ற காட்சி இது.

பஞ்சாபில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் அலி கலான் கிராமத்தில் பீஸ் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் தடுப்புகளை உடைத்துக்கொண்டு தண்ணீர் வயல்களுக்குள் புகுந்தது.

அப்போது விவசாயிகள் தங்களது பயிர்கள் மூழ்குவதை பார்த்து தங்கள் நிலைமையை கடவுளிடம் கூறினர்.

மாநிலம் முழுவதும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு