ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் திரண்ட ஊர் மக்கள்
மேற்கு வங்க மாநிலத்தின் நதியா ஜில்லாவைச் சேர்ந்த ஹவில்தார் ஜண்டு அலி ஷேக் ஆயுததாரிகள் உடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்தார். இந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் ராணுவத்திலும் துணை ராணுவப் படைகளிலும் வேலை செய்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் ஆயுததாரிகள் உடனான மோதலில் உயிரிழந்தார். ஜண்டு அலி ஷேக்கின் அண்ணனும் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்துவருகிறார். அவர்தான் ஜண்டு அலியின் சடலத்தை இங்கு எடுத்துவந்தார்.
ஜண்டு அலி ஷேக்-ன் இறுதி ஊர்வலத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் தொடர்ந்து அவரின் வீட்திற்கு அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருக்கின்றனர். ராணுவ மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது.
"என்னோட இளையமகன் போய்விட்டான். எனக்கு கவலையாகவும் துக்கமாகவும் உள்ளது. ஆனால் என் பையன் நாட்டுக்காகத் தான் உயிரை விட்டான்." என்கிறார் அவரின் தந்தை ஷோபூர் அலி ஷேக்
ஜண்டு அலி ஷேக் அனைவருக்கும் மிகப்பெரிய முன்னுதாரணம் என ஊர் மக்கள் சொல்லும் நிலையில் அவர் தங்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



