காணொளி: 'பேசியது புரியவில்லை' என்ற விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில் என்ன?
காணொளி: 'பேசியது புரியவில்லை' என்ற விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில் என்ன?
நாடாளுமன்றத்தில் பேசியது யாருக்கும் புரியவில்லை என்று கூறப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டதாக நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடாளுமன்றத்தில் தாம் பேசிய கருத்தை மறுப்பவர்கள் அதை விவாதிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நிதியமைச்சரை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். "தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது; தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்" என்று ஆவேசமாகத் தெரிவித்த அவர், அண்ணாவின் வழியில் மொழிக்கான ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்வதாகவும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



