மணிப்பூரில் பிரதமர் நரேந்திர மோதி - 2023 வன்முறைக்குப் பின் முதல் பயணம்

காணொளிக் குறிப்பு, மணிப்பூரில் பிரதமர் மோதி
மணிப்பூரில் பிரதமர் நரேந்திர மோதி - 2023 வன்முறைக்குப் பின் முதல் பயணம்

மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

2023 ம் ஆண்டு மே மாதத்தில் மணிப்பூரில், இன வன்முறை வெடித்த பிறகு அம்மாநிலத்திற்கு பிரதமர் மோதி தமது முதல் பயணத்தை இன்று மேற்கொண்டார். பிரதமர் ஏன் இவ்வளவு காலமாக மணிப்பூருக்குச் செல்லவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தன.

மணிப்பூரில் பேசிய பிரதமர் மோதி, "இந்த வன்முறை நமது முன்னோர்களுக்கும் நமது எதிர்கால சந்ததியினருக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. எனவே, நாம் ஒன்றாக மணிப்பூரை அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்" என்று கூறினார்.

"இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இந்தியாவின் பாதுகாப்பிலும் மணிப்பூரின் பங்களிப்பிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். இந்திய தேசிய ராணுவம் முதன்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய மணிப்பூர் நிலம் இது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மணிப்பூரை இந்தியாவின் சுதந்திரத்திற்கான நுழைவாயில் என்று அழைத்தார். இந்த நிலம் பல துணிச்சலான மனிதர்களைக் கொடுத்துள்ளது" என்று பிரதமர் மோதி கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு