அரிய வகை பூனையை விற்று கைதான தம்பதி - மீட்கப்பட்ட 19 பூனைகள்

காணொளிக் குறிப்பு, அரிய வகை பூனையை விற்று கைதான தம்பதி
அரிய வகை பூனையை விற்று கைதான தம்பதி - மீட்கப்பட்ட 19 பூனைகள்

பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தெரியும் இந்த பூனை அரிய அயல்நாட்டு வகையைச் சேர்ந்தது.

ஸ்பெயினின் மையோகாவில் உள்ள ஒரு தம்பதி, இந்தப் பூனையை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் அந்தத் தம்பதியின் வீட்டைச் சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து 19 பூனைகள் மீட்கப்பட்டன.

இது, இத்தகைய சம்பவங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்று அதிகாரிகள் கூறினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு