பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய சமூக ஊடக பிரபலம் - எட்டு ஆண்டுகள் சிறை
பிரேசிலில் ஏழ்மை நிலையிலிருந்து கேட் டோரெஸ் சர்வதேச மாடல் மற்றும் உடல்நலம் குறித்த இன்ஃப்ளூயன்சராக உருவெடுத்தார்.
டோரெஸின் மாடலிங் தொழில் வளர்ந்த பின்னர், அவர் பிரபலங்களை சந்திக்கத் தொடங்கினார். அவர் லியானார்டோ டிகாப்ரியோவை டேட்டிங் செய்வதாக ஊடகங்கள் யூகங்களை வெளியிட்டன. இணைய பயிற்சி வகுப்புகளுக்கு கட்டணம் வாங்கினார். சில வாடிக்கையாளர்களை தன்னுடன் வாழவும் தனக்காக வேலை செய்யவும் வற்புறுத்தினார். டோரெஸின் வீட்டு வேலைகளை செய்வதற்காக சுமார் ஒரு லட்சத்து 60,000 ரூபாய் ஆனா பணியமர்த்தப்பட்டார்.
டோரெஸின் வாடிக்கையாளர் டிசிரே, அவர் தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாக கூறுகிறார்.
இதிலிருந்து வெளியேறினால் போலீஸிடம் பாலியல் தொழில் குறித்து புகார் செய்துவிடுவதாக தன்னை டோரெஸ் மிரட்டியதாக டிசிரே கூறுகிறார். சமூக ஊடகங்களில் அவருடைய பதிவுகள் மிகவும் தொந்தரவாக மாறின.
டோரெஸால் பாதிக்கப்பட்ட சிலர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். கைது செய்யப்பட்டு, பிரேசிலுக்கு நாடு கடத்தப்பட்ட அவர் குற்ற வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். டோரெஸை சிறையில் பார்ப்பதற்குரிய அரிதான நீதிமன்ற உத்தரவை பிபிசி பெற்றது.
இவர் தொடர்பான முழுமையான காணொளி இது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



