தமிழ்நாட்டில் முதல்முறையாக இரவில் ட்ரோன் மூலம் யானைகளை கண்காணிக்கும் வனத்துறை
தமிழ்நாட்டில் முதல்முறையாக இரவில் ட்ரோன் மூலம் யானைகளை கண்காணிக்கும் வனத்துறை
தமிழ்நாட்டில் முதன்முறையாக இரவு நேரத்தில் யானைகளை தெர்மல் ட்ரோன்களால் வனத்துறை கண்காணிக்க துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலுார் வனக்கோட்டம், கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்குமான தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை, காஃபி தோட்டங்கள் உள்ளன.
மனித–யானை மோதலை தடுப்பதற்காக, தமிழகத்திலேயே முதல் முறையாக இரவு நேரங்களிலும் யானைகளைக் கண்காணிக்கும் தெர்மல் ட்ரோன்கள், கூடலுார் வனக்கோட்டத்தில் வனத்துறை பயன்படுத்தத் துவங்கியுள்ளது.
இந்த ட்ரோன்களில் மக்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், யானைகளை ஒலி எழுப்பித் துரத்துவதற்குமான ஆடியோ இணைப்பும் உள்ளன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



