கேரளாவில் அல்பாசி ஆராட்டு விழாவுக்காக மூடப்பட்ட விமான நிலைய ஓடுதளம்

காணொளிக் குறிப்பு, கேரளாவில் அல்பாசி ஆராட்டு விழாவுக்காக மூடப்பட்ட விமான நிலைய ஓடுதளம்
கேரளாவில் அல்பாசி ஆராட்டு விழாவுக்காக மூடப்பட்ட விமான நிலைய ஓடுதளம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு விமான நிலைய ஓடுதளம் கடந்த வியாழக்கிழமை சில மணிநேரம் மூடப்பட்டது.

இந்த திருவிழாவின் போது ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள சாமிகள் ஊர்வலமாக சங்குமுகம் கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு புனித நீராட்டப்படும். அலங்கரிக்கப்பட்ட யானைகளும் இந்த ஊர்வலத்தில் பங்கெடுத்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு