காணொளி: பிரபல 'ஹோம் அலோன்' வீட்டை கேக்கில் உருவாக்கிய பெண்

காணொளிக் குறிப்பு, பிரபல 'ஹோம் அலோன்' வீட்டை கேக்கில் உருவாக்கிய பெண்
காணொளி: பிரபல 'ஹோம் அலோன்' வீட்டை கேக்கில் உருவாக்கிய பெண்

இது வீடல்ல, ஒரு கேக் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹோம் அலோனில் வரும் வீடுதான் இது.

இந்த படத்தில், குடும்பத்தினர் தவறுதலாக கெவின் என்ற சிறுவனை இந்த வீட்டிலேயே விட்டுவிட்டு சுற்றுலாவுக்கு செல்வார்கள்.

அந்த வீட்டை இப்போது ஒரு பெண் கேக்காக உருவாக்கியுள்ளார்.

கிறிஸ்துமஸை ஒட்டி தனது கடையில் காட்சிப்படுத்துவதற்காக கிரேஸ் ஹண்ட் என்ற பேக்கர் இந்த கேக்கை தயாரித்துள்ளார்.

தனக்கு பிடித்த திரைப்படத்தில் வரும் வீட்டை போன்ற ஒரு கேக்கை வடிவமைக்க கிரேஸ் பல வாரங்கள் செலவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு