காணொளி: 10வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிர்தப்பிய நபர்
காணொளி: 10வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிர்தப்பிய நபர்
குஜராத் மாநிலம் சூரத்தில், 10-வது மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் ஒருவர், 8-வது மாடியின் ஜன்னலில் சிக்கி உயிர் தப்பினார்.
தீயணைப்புத் துறை அளித்த தகவலின்படி, அந்நபர் தனது வீட்டின் பால்கனி அருகே உறங்கிக் கொண்டிருந்தபோது, தூக்கத்திலேயே தவறுதலாக கீழே விழுந்து ஜன்னலில் சிக்கிக்கொண்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை கண்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
பின் தீயணைப்புத் துறையினர் அந்த நபரை பாதுகாப்பாக மீட்டனர். அதன்பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து சூரத் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



