கிரீன்லாந்தில் 1960,70களில் நடந்த கருத்தடை முறைகேடுக்கு இலக்கான அப்பாவி பெண்கள்

காணொளிக் குறிப்பு, விருப்பமின்றி கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட கிரீன்லாந்து பெண்கள்
கிரீன்லாந்தில் 1960,70களில் நடந்த கருத்தடை முறைகேடுக்கு இலக்கான அப்பாவி பெண்கள்

கிரீன்லாந்தில் உள்ள 12 வயதுக்குட்பட்ட சிலர் உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள், 60 மற்றும் 70களில் பெரும்பாலும் சுய அனுமதியின்றி - கருத்தடை சாதனம் பொருத்த கட்டாயப்படுத்தப்பட்டனர்.

கிரீன்லாந்தின் வளர்ந்து வரும் இன்யூட் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் டேனிஷ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

கிரீன்லாந்து பெண்கள்

"சுருள் நடவடிக்கை" என்று அழைக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக டென்மார்க் அரசாங்கம் ஒரு சுயாதீன விசாரணையை அறிவித்துள்ளது. ஆனால் பிபிசி சம்பந்தப்பட்ட பெண்களிடம் நடத்திய சமீபத்திய தன்னிச்சையான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: