வலையில் சிக்கிய ராட்சத மீன்களை விடுவித்த கருணை உள்ளங்கள் - காணொளி

காணொளிக் குறிப்பு, வலையில் சிக்கிய ராட்சத மீன்களை விடுவித்த கருணை உள்ளங்கள்
வலையில் சிக்கிய ராட்சத மீன்களை விடுவித்த கருணை உள்ளங்கள் - காணொளி

சமீபத்தில் இந்தோனீசியாவுக்கு அருகில் இருக்கும் கடலில் கிடந்த மீன்பிடி வலையில் ஐந்து ராட்சதத் திமிங்கலச் சுறா மீன்கள் சிக்கிக் கொண்டன.

தப்பிக்க வழியின்றித் தவித்துக்கொண்டிருந்த அம்மீன்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் விடுவித்தனர்.

திமிங்கலச் சுறாக்களின் வாய் அகலமானது. அவை பிளாங்டன் (plankton) எனப்படும் சிறிய கடல் உயிரினங்களையும் சிறுமீன்களையுமே உண்ணும்.

மேலும் இவ்விலங்குகள் மிகவும் சாதுவானவை என்கின்றனர் கடல்வாழ் உயிரியல் வல்லுநர்கள்.

திமிங்கலச் சுறா, இந்தோனீசியா, கடல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: