சௌதி அரேபியாவில் நடந்த நீச்சல் உடை ஃபேஷன் ஷோ - இது எப்படி சாத்தியமானது? - காணொளி

காணொளிக் குறிப்பு, சௌதி அரேபியாவில் நடந்த நீச்சல் உடை ஃபேஷன் ஷோ - இது எப்படி சாத்தியமானது? - காணொளி
சௌதி அரேபியாவில் நடந்த நீச்சல் உடை ஃபேஷன் ஷோ - இது எப்படி சாத்தியமானது? - காணொளி

நீச்சல் உடை அணிந்து ஃபேஷன் ஷோ செய்யும் இந்த மாடல்கள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

சௌதி அரேபியாவில் முதல் முறையாக நீச்சல் உடை அணிந்த மாடல்களின் ஃபேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘REDSEA’ ஃபேஷன் வீக்கில் மொராக்கோ வடிவமைப்பாளர் யாஸ்மினா குன்சல் வடிவமைத்த ஆடைகளை அணிந்து மாடல்கள் நடந்தனர்.

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விஷன் 2030-ஐ நிர்ணயித்துள்ளார்.

அதன் கீழ் சௌதி அரேபியா பல வகையான சமூக மாற்றங்களையும் கொண்டு வர முயற்சிக்கிறது.

இந்த ஃபேஷன் ஷோ செயின்ட் ரெஜிஸ் ரெட் சீ ரிசார்ட்டில் நடந்தது. ரெட் சீ குளோபல் என்பது சௌதி அரேபியாவில் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தங்கள் நாட்டின் ஜிடிபியில் 1.4% பங்கு ஃபேஷன் துறைக்கு சொந்தமானது என்றும் சுமார் இரண்டரை லட்சம் பேர் இதில் வேலை செய்வதாகவும் சௌதி ஃபேஷன் கமிஷன் தெரிவிக்கிறது.

சௌதி அரேபியாவில் நடந்த நீச்சல் உடை ஃபேஷன் ஷோ

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)