காஸாவின் மனிதாபிமானப் பகுதியைத் தாக்கிய இஸ்ரேல் - காணொளி

காணொளிக் குறிப்பு, காஸாவின் மனிதாபிமானப் பகுதியைத் தாக்கிய இஸ்ரேல் - காணொளி
காஸாவின் மனிதாபிமானப் பகுதியைத் தாக்கிய இஸ்ரேல் - காணொளி

காஸாவில் உள்ள வரையறுக்கப்பட்ட மனிதாபிமானப் பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 71 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

கான் யூனிஸ் அருகே அல்-மவாசி பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஹமாஸின் ராணுவப் பிரிவுத் தலைவர் முகமத் டெய்ஃப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறிவைக்கப்பட்ட பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரைத் தவிர பொதுமக்கள் யாரும் இல்லை என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால், இந்தக் கூற்றை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 289-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாக ஹமாஸ் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியது.

இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குறைந்தது 38,400 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

காஸா

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)