காணொளி: படுக்கையறையில் கிடந்த குண்டு - வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி
காணொளி: படுக்கையறையில் கிடந்த குண்டு - வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி
2 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பிய இந்த குடும்பம், படுக்கையறையில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இஸ்ரேலுடனான 2 ஆண்டுகளுக்கும் மேலான போருக்குப் பிறகு கணிக்க முடியாத வகையில் வெடிகுண்டுகள் இருக்கும் இடமாக காஸா மாறிவிட்டதாக கருதப்படுகிறது.
காஸாவில் சுமார் 61 மில்லியன் டன் இடிபாடுகள் உள்ளதாக ஐ.நா கணித்துள்ளது.
இதில் வெடிபொருட்களை மறைத்து வைக்க முடியும், அவை நகர்த்தப்பட்டாலோ அல்லது தாக்கப்பட்டாலோ வெடிக்கக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



