ஐ.சி.சி. தடை எதிரொலி: இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்னவாகும்?
இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்தமையானது, தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான முறையில் விளையாடியிருந்தது. அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தொடர்பில் இலங்கை முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம், இலங்கை நாடாளுமன்றத்தில் நாளொன்றை ஒதுக்கி, விவாதம் நடத்தி இலங்கை கிரிக்கெட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐசிசி தீர்மானித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



