காணொளி: பனிப்பொழிவின் நடுவே கர்ப்பிணி பெண்ணின் பயணம்
காணொளி: பனிப்பொழிவின் நடுவே கர்ப்பிணி பெண்ணின் பயணம்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கர்ப்பிணிப் பெண் கட்டில் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த பனியில் சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றதாக பெண்ணின் சகோதரர் அஃப்தாப் ஹுசைன் தெரிவிக்கிறார்.
மேலும், அவர் கூறும்போது நாங்கள் சாலையை அடைந்ததும், எந்த வாகனங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நாங்கள் மேலும் சில கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. பின்னர் நாங்கள் ஒரு ஆட்டோ ரிக்ஷா மூலம் மருத்துவமனைக்கு சென்றோம் என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



