'டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு' - வெள்ளை மாளிகை கருத்து
'டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு' - வெள்ளை மாளிகை கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் கரோலைன் லெவிட் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக பேசியவர். "அதிபர், தாய்லாந்து - கம்போடியா, இஸ்ரேல் - இரான், ருவாண்டா - காங்கோ ஜனநாயக குடியரசு, இந்தியா - பாகிஸ்தான், செர்பியா - கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா ஆகியவற்றுக்கு இடையேயான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்."
"இதன் அர்த்தம் என்னவென்றால், அதிபர் டிரம்ப் சராசரியாக மாதத்துக்கு ஒரு அமைதி ஒப்பந்தம் அல்லது சண்டை நிறுத்தத்தை தனது 6 மாத பதவிக் காலத்தில் மேற்கொண்டுள்ளார். அதிபர் டிரம்புக்கு முன்னரே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



