இணையத்தில் பிரபலமாகி வரும் காஷ்மீரின் நிழல்பட கலைஞரான 25 வயது இளைஞர்

காணொளிக் குறிப்பு, படிப்பை பாதியில் நிறுத்திய காஷ்மீர் இளைஞர் நிழல்பட கலைஞராகியுள்ளார்.
இணையத்தில் பிரபலமாகி வரும் காஷ்மீரின் நிழல்பட கலைஞரான 25 வயது இளைஞர்

இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியின் அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஹைல் அஹமத் பட் என்ற இளைஞர் நிழல்புகைப்பட கலைஞராக பிரபலமாகி வருகிறார்.

குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார் அவர். தந்தையுடன் சேர்ந்து தச்சு வேலைகள் செய்து வந்தார். பகலில் தச்சு வேலையும் மாலையில் தனக்கு பிடித்த நிழல் புகைப்படங்களிலும் ஆர்வம் செலுத்தினார்.

காகிதத்தில் வேண்டிய உருவத்தை வடித்துக் கொண்டு, அதன் மீது வெளிச்சம் பாய்ச்சி, அற்புதமான நிழல்படங்களை உருவாக்கி வருகிறார்.

இணையத்தில் அவது நிழல்பட வீடியோக்கள் வைரலாகி வருவதால், அவருக்கு இதன் மூலம் வருமானமும் கிடைக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)