காணொளி: மொராக்கோவில் தொடரும் ஜென் 'Z' போராட்டத்தின் பின்னணி
மொராக்கோவின் நகரங்களில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரபாத்தில் தொடங்கிய போராட்டங்கள், காசாபிளாங்கா, மராகேச் உள்பட மற்ற நகரங்களுக்கும் பரவியுள்ளன.
இப்போராட்டங்கள் இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய செயலிகளில் தங்களை ஜென் Z 212 என்று அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டன. அவர்களின் கோரிக்கைகள் என்பது கல்வி மற்றும் மருத்துவத்தில் அவசர சீர்திருத்தங்கள்.
"இளைஞர்கள் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கோருகிறார்கள். நாங்கள் கேட்பது சாத்தியமற்றவை அல்ல..அவை அடிப்படைத் தேவைகள். இதை ஏன் அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை?" என ஒரு போராட்டக்காரர் கேள்வி எழுப்புகிறார்.
மொராக்கோ 'ஆப்பிரிக்கா கோப்பை' கால்பந்து போட்டிகளை நடத்த தயாராகி வரும் நிலையில், புதிய மைதானங்களுக்கான செலவுகளையும் பலர் விமர்சித்துள்ளனர்.
போராட்டங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் 400க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



