காணொளி: இந்தியாவின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
காணொளி: இந்தியாவின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO சனிக்கிழமை ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த ஆயுத அமைப்பில் தரையிலிருந்து வானில் ஏவப்படும் ஏவுகணைகள், குறுகிய தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் உயர் சக்தி கொண்ட லேசர் ஆயுதங்கள் அடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எதிரி போர் விமானங்கள், டிரோன்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவை பாதுகாப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், DRDOவின் இந்த வெற்றிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



