பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலின் விளைவுகளைக் காட்டும் 10 புகைப்படங்கள்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் பல கட்டடங்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 57 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவால் தாக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை குறித்து இரு நாடுகளும் வெவ்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் மொத்தம் ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இந்தியா மொத்தம் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.

இந்தியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்குப் பிறகான பாகிஸ்தானின் சூழலை இந்த 10 புகைப்படங்கள் காட்சிபடுத்துகின்றன.

மறுபுறம், பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா தவறிழைத்துவிட்டது. அதற்குக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு