பள்ளி வகுப்பறையில் சீறிய 13 அடி நீள ராஜநாகம் - என்ன நடந்தது? - காணொளி

காணொளிக் குறிப்பு, நான்கு மீட்டர் உயரம் கொண்ட ராஜநாகம்... ஒடிசா பள்ளியில் பரபரப்பு
பள்ளி வகுப்பறையில் சீறிய 13 அடி நீள ராஜநாகம் - என்ன நடந்தது? - காணொளி

உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்ட நீண்டு வளரும் பாம்பினம் ராஜநாகமாகும். சில நாட்களுக்கு முன்பு ஒரிசாவில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 4 மீட்டர் நீளம் கொண்ட பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அந்த பள்ளியில் பணியாற்றுபவர்கள்.

அப்போது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை. துரிதமாக செயல்பட்ட பள்ளி பணியாளர்கள் பாம்பு பிடிக்கும் நபருக்கு அழைப்பு விடுத்து, பாம்பை உயிருடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிறகு வனத்துறையின் உதவியுடன் அந்த பாம்பு வனத்திற்குள் மீண்டும் விடப்பட்டது.

ராஜ நாகத்தின் வகைகள் குறித்த சுவாரசியமான ஆராய்ச்சித் தகவல்கள் அடங்கிய செய்தி ஒன்றை பிபிசி தமிழ் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த கட்டுரையை கீழே உள்ள இணைப்பில் சென்று நீங்கள் படிக்கலாம்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு