காணொளி: 10-க்கும் மேற்பட்ட பீர் குடுவைகளுடன் இவர் ஏன் இப்படி ஓடுகிறார்?

காணொளிக் குறிப்பு, காணொளி: இத்தனை பீர் குடுவைகளுடன் இவர் ஏன் இப்படி ஓடுகிறார்?
காணொளி: 10-க்கும் மேற்பட்ட பீர் குடுவைகளுடன் இவர் ஏன் இப்படி ஓடுகிறார்?

இவர் ஒன்றும் பியர் குடுவைகளை திருடிக்கொண்டு ஓடவில்லை. இது ஒரு போட்டி. ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு யார் அதிக பியர் குடுவைகளை ஏந்திக்கொண்டு செல்கிறார்கள் என்பதுதான் இந்த போட்டி.

ஜெர்மனியின் ஆடென்ஸ்பர்க் நகரில் நடந்த இந்த போட்டியில் இந்த நபர் 31 குடுவைகளை ஏந்திக்கொண்டு ஓடினார். ஆனால், கடைசியில் இவர் 17 குடுவைகளை மட்டுமே அந்த பக்கம் இருந்த மேசையில் வைக்க முடிந்தது. பியர் கீழே சிந்தினாலோ குடுவைகள் கீழே விழுந்தாலோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு