காணொளி: பூனையை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்
காணொளி: பூனையை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்
பிரான்ஸில் அண்டை வீட்டுக்கு சென்ற பூனைக்கு வித்தியாசமான தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பிரான்சின் தெற்கு பகுதியில், அண்டை வீட்டு பெண்ணின் பூனை தனது தோட்டத்திற்குள் குதித்து வருவதாக ஒருவர் புகார் அளித்தார்.
இதனையடுத்து நீதிமன்றம் பூனையின் உரிமையாளரிடம் பூனைையை வீட்டுக்குள் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.
விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் இதை ஆபத்தான முன்னுதாரணமாகக் கருதுகின்றன.
இதுபோல் தொடர்ந்தால், பூனை உரிமையாளர்கள் பூனைகளை கயிற்றில் கட்டி நடக்கும் நிலை வரக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



