காணொளி: டிரம்பின் 50% வரி - 'சமாளிக்க முடியும்' என்ற மோதியின் நம்பிக்கைக்கு என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, டிரம்பின் 50% வரி - 'சமாளிக்க முடியும்' என்ற மோதியின் நம்பிக்கைக்கு என்ன காரணம்?
காணொளி: டிரம்பின் 50% வரி - 'சமாளிக்க முடியும்' என்ற மோதியின் நம்பிக்கைக்கு என்ன காரணம்?

"இன்று உலகம் முழுவதும் சொந்த பொருளாதார நலன் சார்ந்த அரசியல் நிறைந்துள்ளது. அனைவரும் தங்களின் சொந்த விஷயங்களைச் செய்வதில் கவனமாக உள்ளனர். நாம் இதை நன்றாக கவனித்து வருகிறோம். நம் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம், ஆனால் நம்மால் சமாளிக்க முடியும்"

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த கருத்தை தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் 25% வரிகளை விதித்தார் டிரம்ப். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இந்த வரிகள் இன்று (ஆகஸ்ட் 27, புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணி (அமெரிக்க நேரப்படி நள்ளிரவு 12 மணி) முதல் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்படும் இந்திய தயாரிப்புகளுக்கு இந்த வரிகள் பொருந்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு இந்திய அரசுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரிய அடியாக இருக்கும் என கருதப்படுகிறது. இத்தகைய அதிர்ச்சிகளை சமாளிப்பதற்கான நிரந்தர ஏற்பாடு இருக்க வேண்டும் எனக் கூறிய மோதி இந்திய பொருளாதாரத்திற்கு அந்த பலம் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த தன்னம்பிக்கைக்குக் காரணம் என்ன? இந்தியப் பொருளாதாரம் உண்மையில் 'வெளிப்புற அதிர்ச்சிகளை' தாங்கும் திறன் கொண்டதா? 'தன்னம்பிக்கை மற்றும் சுதேசி' மீதான இந்த நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள 5 காரணங்கள் என்ன? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு