காசாவிலிருந்து 11 லட்சம் பேரை ஒரே நாளில் வெளியேற எச்சரிக்கும் இஸ்ரேல் ராணுவம் – என்னநடக்கிறது? - காணொளி
காசா பகுதியில் வசிக்கும் மக்களை ‘பாதுகாப்புப் காரணங்களுக்காக’ அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. காசா நகரத்தில் வசிப்பவர்களை தெற்கு பகுதிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது.
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்தாக்குதலின் பகுதியாக, தரைவழித் தாக்குதல் நடத்த காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், கனரக பீரங்கிகள் மற்றும் டாங்கிகளைத் திரட்டி வருகிறது. இதைத்தொடர்ந்தே, அடுத்த 24 மணிநேரங்களில் காசா நகரத்தில் இருக்கும் மக்களை தெற்கிலிருக்கும் பகுதிகளுக்கு இடம்பெயரச் சொல்லியிருக்கிறது இஸ்ரேல்.
ஐ.நா.வின் தகவலின்படி, வாடி காசா எனப்படும் பகுதிக்கு வடக்கே இருக்கும் 11 லட்சம் மக்கள் ஒரே நாளில் தெற்கு நோக்கி இடம் பெயர வேண்டிவரும்.

பட மூலாதாரம், Getty Images



