குஜராத்: அடுக்கு மாடி குடியிருப்பில் முஸ்லிம் குடும்பம் குடியேற எதிர்ப்பு ஏன்? பிபிசி கள ஆய்வு
குஜராத் மாநிலம் வதோதராவின் ஹர்னி பகுதியில் முதலமைச்சர் வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குறைந்த வருமானப் பிரிவினருக்கான குடியிருப்பு திட்டமான மோட்நாத் ரெசிடென்சியில் உள்ள 462 குடியிருப்புகளில் ஒரேயொரு முஸ்லிம் பெண்ணுக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து ஜூன் 5ம் தேதி அங்குள்ள 32 குடியிருப்புவாசிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் நிர்வாகத்திற்கு மனு கொடுத்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான (லோயர் இன்கம் க்ரூப் - எல்.ஐ.ஜி) அரசு திட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை ரத்து செய்து, அவருக்கு வேறு இடத்தில் வீடு வழங்கக் கோரி இந்த குடியிருப்பாளர்கள் ஜூன் 5 ஆம் தேதி மனு அளித்தனர். கலாசார நகரம் என்று அழைக்கப்படும் வதோதராவில் முஸ்லிம்கள் மீது இந்துகளின் வெறுப்பை இந்த மனு காட்டுகிறது.
குஜராத்தில் 1991 முதல் நடைமுறையில் உள்ள இந்தச் சட்டம் (பதற்றம் நிறைந்த பகுதிகள் சட்டம்) அது பொருந்தக் கூடிய பகுதிகளில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசின் அதாவது மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்குகிறது.
என்ன நடந்தது? முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



