தைவான் நிலநடுக்கம் ஏற்படுத்திய சேதம் என்ன? காணொளி
தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கடும் சேதம் ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
குறைந்தது 9 பேர் இதில் உயிரிழந்தனர்.
7.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல பகுதிகள் உருகுலைந்து போயுள்ளன.
கடற்கரையோர பகுதிகளில் சுரங்கப் பாதைகள், சாலைகள் போன்றவை சேதமடைந்துள்ளது.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சிக்கியுள்ள 600-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிங்ஷுய் சுரங்கத்தை நோக்கி செல்லும் சாலையின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.
இதுபோன்ற நிலநடுக்கத்தை இதுவரை பார்த்ததில்லை என்று அங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
கடைசியாக, கடந்த 1999-இல் தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
7.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர், 5000 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

பட மூலாதாரம், Reuters
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



