காணொளி: ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதியதில் குறைந்தது 39 பேர் உயிரிழப்பு
காணொளி: ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதியதில் குறைந்தது 39 பேர் உயிரிழப்பு
தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர்.
கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. மலகாவில் இருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் தடம் புரண்டு, பக்கத்து தண்டவாளத்தில் சென்ற ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 73 பேர் காயமடைந்துள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கர் ப்யூன்டே தெரிவித்தார்.
முதலில் தடம் புரண்ட ரயிலில் சுமார் 300 பயணிகளும், மற்றொரு ரயிலில் சுமார் 100 பயணிகளும் பயணித்துள்ளனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



