காணொளி: இலங்கையில் பாறையில் ரத்தினக்கல் - பார்க்க குவிந்த மக்கள்

காணொளிக் குறிப்பு, பாறையில் ரத்தினக்கல் - பார்க்க குவிந்த மக்கள்
காணொளி: இலங்கையில் பாறையில் ரத்தினக்கல் - பார்க்க குவிந்த மக்கள்

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களின் போது அடித்துவரப்பட்ட ஒரு பாறை கல்லில், ரத்தினக்கல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கண்டி மாவட்டம் கலஹா கல்லன்தென்ன கீழ் பிரிவில் உள்ள ஓர் ஆலயத்துக்கு அருகில் இந்த பாறை காணப்படுகிறது.

பாறையில் இருந்து ஒருவித ஒளி வந்ததை தொடர்ந்து இதை கவனித்ததாக மக்கள் கூறுகின்றனர். இதையடுத்து, தங்க ஆபரணங்கள் மற்றும் ரத்தினக்கற்கள் அதிகார சபை அதிகாரிகள் இந்த இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர்.

ஆய்வில் அந்த பாறைக்குள் நீல நிறத்திலான கற்கள் அடங்கிய கொத்தனி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும், இது ரத்தினக்கல்லா என்பது கூடுதல் ஆய்வுக்கு பிறகே உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதுவரை ஆயுதமேந்திய போலீஸார் காவலில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த கல்லை காண பெருந்திரளான மக்கள் மற்ற பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளனர். அதே நேரம், தங்கள் ஊரில் இருந்து கிடைத்த கல்லை அரசு எடுத்துச் சென்றால் அதில் கிடைக்கும் பணத்தை தங்கள் பகுதியின் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு