காணொளி: உறைந்த நீர்வீழ்ச்சியை ரசிக்கும் மக்கள்
காணொளி: உறைந்த நீர்வீழ்ச்சியை ரசிக்கும் மக்கள்
யுக்ரேனிய மலையில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான மணியாவா நீர்வீழ்ச்சி தற்போது உறைந்த நிலையில் உள்ளது.
மலைப்பகுதியில் வெப்பநிலை குறைந்ததால், 20 மீட்டர் உயரமுள்ள இந்த நீர்வீழ்ச்சி உறைந்துவிட்டது.
நீர்வீழ்ச்சி உறைந்து போயிருந்த அரிய நிகழ்வை நேரில் கண்ட மக்கள் அதனை புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
ரஷ்ய தாக்குதல்களால் யுக்ரேனின் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழலால் யுக்ரேனில் பலரும் கடுங்குளிரை எதிர்கொண்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



