இந்தோனீசியாவில் இயேசுவை முடிவெட்டச் சொன்ன டிக்டோக் பிரபலத்திற்கு 3 ஆண்டுகள் சிறை

காணொளிக் குறிப்பு,
இந்தோனீசியாவில் இயேசுவை முடிவெட்டச் சொன்ன டிக்டோக் பிரபலத்திற்கு 3 ஆண்டுகள் சிறை

இந்தோனீசியாவில், டிக்டோக் பிரபலம் ஒருவருக்கு, தனது தொலைபேசியில் இருந்த இயேசுவின் படம் ஒன்றிடம் பேசி, இயேசுவை முடிவெட்டிக் கொள்ளும்படி கூறியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டிக்டோக்கில் 4,42,000க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ள ரட்டு தலிஸா என்ற திருநங்கை நேரலையில், "ஓர் ஆண் போலத் தெரிவதற்கு முடியை வெட்டிக்கொள்ள வேண்டும்" என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

வெறுப்புணர்வைத் தூண்டியதாக சர்ச்சைக்குரிய 'ஆன்லைன் வெறுப்புப் பேச்சு சட்டத்தின்' கீழ் அவரைக் குற்றவாளி என அறிவித்த சுமத்ராவின் மெடன் பகுதியிலுள்ள நீதிமன்றம், திங்கள் கிழமையன்று அவருக்கு இரண்டு ஆண்டுகள், பத்து மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அவரது பேச்சு சமுதாயத்தில் "பொது ஒழுங்கு" மற்றும் "மத நல்லிணக்கத்தை" சீர்குலைக்கக் கூடும் எனக் கூறிய நீதிமன்றம் அவர் இறை நிந்தனை செய்திருப்பதாகக் குற்றம் சுமத்தியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)