போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ - நிகழ்வு எப்படி நடந்தது?

காணொளிக் குறிப்பு, போப்
போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ - நிகழ்வு எப்படி நடந்தது?

267 ஆவது போப்பாக ராபர்ட் ப்ரெவோஸ்ட் அறிவிக்கப்பட்டார். இவர் போப் பதினான்காம் லியோவாக அறியப்படுகிறார்.

வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று(மே 18) போப்பாக பதவியேற்றார்.

போப் லியோவுக்கு ஒரு கார்டினல் மீனவர் மோதிரத்தை அணிவித்தார். இது அவரது பதவி மற்றும் பாரம்பரியம் புனித பீட்டரிடம் இருந்து வந்ததைக் குறிக்கிறது.

முன்னதாக, லியோ போப் வாகனத்தில் வந்து அனைவரையும் வரவேற்றார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.