காணொளி: சமூக வலைத்தளங்களுக்கு தடை.. நேபாளத்தில் போராட்டத்தில் குதித்த Gen-Z இளைஞர்கள்

காணொளிக் குறிப்பு, நேபாளத்தில் போராட்டத்தில் குதித்த Gen-Z இளைஞர்கள்
காணொளி: சமூக வலைத்தளங்களுக்கு தடை.. நேபாளத்தில் போராட்டத்தில் குதித்த Gen-Z இளைஞர்கள்

நேபாளத்தில் சமூக ஊடக தடையை எதிர்த்து நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.

Gen Z என தங்களை அடையாளப்படுத்தும் இளம் தலைமுறையினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் பதிவு செய்யாததால் X, யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இதனையடுத்து டிக் டாக் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்தில் ஒன்று திரண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவர். இதனால் இதனை Gen-Z போராட்டம் எனக் குறிப்பிடுகின்றனர்.

முழு விவரம் காணொளியில்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு