என் சகோதரனுக்கு உரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் - பஹல்காம் தாக்குதலில் இறந்த ஷுபமின் சகோதரி

காணொளிக் குறிப்பு, என் சகோதரனுக்கு உரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் - பஹல்காம் தாக்குதலில் இறந்த ஷுபமின் சகோதரி உருக்கம்
என் சகோதரனுக்கு உரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் - பஹல்காம் தாக்குதலில் இறந்த ஷுபமின் சகோதரி

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரனில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபம் திவேதியும் ஒருவர்.

அவருடன் ஜம்மு காஷ்மீர் சென்ற அவரின் குடும்பத்தினர் உயிர் தப்பினர். அவரின் தந்தை சஞ்சய் குமார் திவேதி மற்றும் சகோதரி ஆர்த்தி திவேதி இருவரும் பைசரன் செல்லாமல் குடும்ப உறுப்பினர்களுடன் கீழே திரும்பியதால் பிழைத்ததாகக் கூறுகின்றனர்.

ஷுபமிற்கு உரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் எனக் கூறும் அவரின் குடும்பத்தினர் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை யாரும் மறந்துவிடக்கூடாது என்கின்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு