சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர்: சவால்கள் என்ன?
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர்: சவால்கள் என்ன?
விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் வல்லரசுகள் மட்டுமே ஈடுபட்டிருந்த நிலை மாறி, இன்று மூன்றாம் உலக நாடுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் கூட முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டான ஒரு விண்வெளித் திட்டம் தான் ஆக்ஸியம் 4.
ஆக்ஸியம் 4 திட்டத்தில் இந்திய விமானப்படையின் கேப்டன் சுபான்ஷு சுக்லா பங்கேற்பது இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கும் ககன்யான் திட்டத்திற்கும் சுபான்ஷுவின் இந்தப் பயணத்தில் கிடைக்கும் அனுபவம் உதவியாக இருக்கும்.
மேலதிக விவரங்கள் காணொளியில்
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



