ஏர் இந்தியா விமான விபத்து: அடையாளம் காண முடியாத உடல்கள், கலங்கும் உறவுகள்

காணொளிக் குறிப்பு,
ஏர் இந்தியா விமான விபத்து: அடையாளம் காண முடியாத உடல்கள், கலங்கும் உறவுகள்

ஆமதாபாத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் உயிரிழந்த தங்களின் அன்புக்குரியவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்கள் டிஎன்ஏ மாதிரிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த பயணம் இவ்வளவு துயரம் நிறைந்ததாக இருக்கும் என அந்த விமானத்தில் பயணித்தவர்களும் அவர்களின் உறவினர்களும் நினைத்திருக்க மாட்டார்கள்.

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒரு நிமிடத்துக்குள் விபத்துக்கானது. அருகில் இருந்த மருத்துவ மாணவர்கள் விடுதியில் விமானம் மோதி தீப்பிடித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு