புகைப்படத் தொகுப்பு: பிரிட்டனில் அதிபர் டிரம்புக்கு அரசர் அளித்த வரவேற்பு

பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Samir Hussein/WireImage

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அப்போது அரசர் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலியாவை விண்ட்சர் அரண்மனையில் அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் உடனிருந்தார்.

பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Doug Mills/Getty Images

படக்குறிப்பு, விண்ட்சர் அரண்மனைக்கு சென்ற டிரம்ப் தம்பதிக்கு அரச முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Aaron Chown/WPA Pool/Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் தம்பதியினர் விண்ட்சர் அரண்மனையில் 'மரைன் ஒன்' ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினர். அவர்களை வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி வரவேற்றனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Ian Vogler/Daily Mirror/PA Wire

படக்குறிப்பு, டிரம்ப் அதிபரான பிறகு இரண்டாவது முறையாக பிரிட்டனுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Aaron Chown/PA Wire

படக்குறிப்பு, வேல்ஸ் இளவரசி (இடது), ராணி கமிலியா (நடுவில்), மெலனியா டிரம்ப் (வலது) ஆகியோர் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Ian Vogler/Daily Mirror/PA Wire

படக்குறிப்பு, விண்ட்சர் அரண்மனைக்கு வெளியே டிரம்ப் அரசருடன் கை குலுக்கி பேசிக் கொண்டிருந்தார்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் தம்பதி, அரசர் மற்றும் ராணி, வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசர் அரச சாரட் வண்டியில் ஏறி சென்றனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Samir Hussein/WireImage

படக்குறிப்பு, அதிபர் டிரம்ப் மற்றும் அரசர் சார்ல்ஸ் ஐரிஷ் அரச சாரட் (பிரிட்டன் அரசு குடும்பம் பயன்படுத்தி வந்த வெவ்வேறு சாரட் வண்டிகளில் ஒன்று) வண்டியில் ஊர்வலமாக சென்றனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Toby Melville/PA Wire

படக்குறிப்பு, மெலனியா டிரம்ப் மற்றும் ராணி கமிலியா ஸ்காட்டிஷ் அரச சாரட் வண்டியில் சென்றனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Samir Hussein/WireImage

படக்குறிப்பு, இந்த ஊர்வலம் 1.8 கி.மீ நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாரட் வண்டிகள் 'க்வாட்ராங்கல்' என்ற இடத்துக்கு வந்தன. அங்கு படையணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images

படக்குறிப்பு, அணிவகுப்பை பார்வையிட்ட போது டிரம்ப் மற்றும் அரசர் சார்ல்ஸ் பேசிக் கொண்டனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Aaron Chown/WPA Pool/Getty Images

படக்குறிப்பு, விண்ட்சர் அரண்மனைக்குள் அரசர் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலியாவுடன் அதிபர் டிரம்ப்
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Andrew Caballero-Reynolds/Getty Images

படக்குறிப்பு, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு டிரம்ப் தம்பதி சென்றிருந்தனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எலிசபெத் இரண்டாம் ராணியின் கல்லறையில் டிரம்ப் தம்பதியினர் மரியாதை செலுத்தினர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Jordan Pettitt/PA Wire

படக்குறிப்பு, 200க்கும் மேற்பட்ட பிரிட்டன் மற்றும் அமெரிக்க இசைக் கலைஞர்கள் டிரம்ப் தம்பதியினர் மற்றும் அரசரும் ராணியும் பங்கேற்ற நிகழ்வில் இசைத்தனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Jonathan Brady/REUTERS

படக்குறிப்பு, இசை நிகழ்ச்சியை ஒன்றாக அமர்ந்து கண்டு களித்த டிரம்ப் தம்பதியினர் மற்றும் அரசர் சார்ல்ஸ், ராணி கமிலியா
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Jonathan Brady/PA Wire

படக்குறிப்பு, சிறப்பு ராணுவ இசை நிகழ்ச்சியில் பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவி விக்டோரியா ஸ்டார்மர் பங்கேற்றனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Toby Melville/REUTERS

படக்குறிப்பு, விண்ட்சர் அரண்மனைக்கு மேலே இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற புகையை வெளியேற்றிய படி செல்லும் விமானங்கள்
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Aaron Chown/PA Wire

படக்குறிப்பு, விண்ட்சர் அரண்மனையில் 160 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற பிரமாண்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Aaron Chown/PA Wire

படக்குறிப்பு, விருந்தில் பங்கேற்றவர்களுக்கு மூன்று வகையான உணவுகளும், பல வகையான குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Phil Noble/REUTERS

படக்குறிப்பு, விருந்தில் ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் கும், என்விடியா தலைவர் ஜென்சன் ஹுவாங், ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Evan Vucci/AFP

படக்குறிப்பு, ஊடகத் துறையில் செல்வாக்குள்ள ரூபர்ட் மர்டாக் இந்த விருந்தில் பங்கேற்றார்.
பிரிட்டன் அரண்மனையில் டிரம்ப்

பட மூலாதாரம், Yui Mok/PA Wire

படக்குறிப்பு, விருந்தின் போது அரசர் சார்ல்ஸ் அதிபர் டிரம்பை வரவேற்றுப் பேசினார். பின்னர் பேசிய டிரம்ப், தானும் மெலனியாவும் தங்களை விண்ட்சர் அரண்மனையில் வரவேற்றதற்காக மிகவும் நன்றியுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார்.
லண்டனில் டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. காஸாவில் நடைபெறும் போர் உள்ளிட்டவற்றுக்கு இக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Smallman/Getty Images

படக்குறிப்பு, லண்டனில் டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. காஸாவில் நடைபெறும் போர் உள்ளிட்டவற்றுக்கு இக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு