காஸாவில் உணவுப் பஞ்சத்தால் கடல் ஆமைகளை உண்டு உயிர் வாழும் அவலம்

காணொளிக் குறிப்பு,
காஸாவில் உணவுப் பஞ்சத்தால் கடல் ஆமைகளை உண்டு உயிர் வாழும் அவலம்

காஸாவில் உணவு நெருக்கடி தீவிரமாகி வரும் நிலையில், அழியும் ஆபத்தில் உள்ள கடல் ஆமைகளை இந்த குடும்பங்கள் சாப்பிடுகின்றன. சுமார் இரண்டு மாதங்களாக காஸாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால், உதவி அமைப்புகள் மற்றும் உணவு வங்கிகள் உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதாக ஐ.நா. கூறுகிறது.

ஆனால், சர்வதேச சட்டத்தை மதித்து நடப்பதாகவும் காஸாவில் எவ்வித நிவாரண பற்றாக்குறையும் இல்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.