பிரேசில் காலநிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளை அழித்து சாலை
வரும் நவம்பரில் பிரேசிலின் பெலெமில் காலநிலை உச்சி மாநாடு நடைபெறுகிறது, இதற்காக அமேசான் மழைக்காடுகளில் வழியாக ஒரு புதிய நெடுஞ்சாலை போடப்படுகிறது. இதன் காரணமாக ஒரு அசாயி பெர்ரி பழ விவசாயி தனது சில மரங்களை இழந்துள்ளார்.
"எங்களுக்கு இருக்கும் பயம் என்னவென்றால், யாராவது ஒருவர் இங்கே வந்து ' நாங்கள் இந்தப் பகுதியில் எரிபொருள் நிலையம் கட்டவும், லாரிகளை பயன்படுத்த ஒரு கிடங்கைக் கட்டவும் இந்த இடம் எங்களுக்குத் தேவை' என கூறினால், நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என்பதே", என்று அவர் கூறினார்.
இங்குள்ள வனவிலங்கு மருத்துவமனை ஒன்று காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கிறது. அங்கே சிகிச்சை முடிந்தபிறகு அந்த விலங்குகளை வனத்துக்குள் விடுவிக்கக்கூடிய இடத்தை, இந்த நெடுஞ்சாலை பாதிக்கிறது.
வனவிலங்குகள் கடக்கும் இடங்கள், பைக் பாதைகள் மற்றும் சூரிய விளக்குகள் ஆகியவற்றுடன் இந்த சாலை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மாநாட்டுக்கான ஒரு மையம் மற்றும் ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் சிறிய விமான நிலையம் மூன்று மடங்காக விரிவுபடுத்தப்படவுள்ளது. சில உள்ளூர்வாசிகள் காலநிலை உச்சி மாநாடு இங்கே நடப்பதால், இப்பகுதி நன்மையடையும் என கருதுகின்றனர்.
இது குறித்த கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



