கிளிமஞ்சாரோவின் 19,340 அடி மலை உச்சியில் ஏறிய 5 வயது பஞ்சாபி சிறுவன்
கிளிமஞ்சாரோவின் 19,340 அடி மலை உச்சியில் ஏறிய 5 வயது பஞ்சாபி சிறுவன்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 வயதான தெக்பீர் சிங், கிளிமஞ்சாரோ மலையில் ஏறிய இளம் ஆசிய நபராக கருதப்படுகிறார். தனது தந்தை சுகிந்தர் தீப் சிங்குடன் இணைந்து இந்த சாதனையைச் செய்துள்ளார் தெக்பீர்.
கடுமையான காற்று, மோசமான குளிரைக் கடந்து அவர்களது குழு, கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,340) உயரம் கொண்ட கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை அடைந்தது.
பயணத்திற்கு முன் தெக்பீருக்கு அளிக்கப்பட்ட பிரத்யேக உடற்பயிற்சிகள், புதிய தட்பவெப்பநிலைக்குப் பழக, மலையில் உடல்நிலையைப் பராமரிக்க உதவின என அவரது தந்தை சுகிந்தர் தீப் சிங் கூறுகிறார்.
மேலும் விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Sukhinder Deep Singh
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



