ஹவாயில் 300 மீட்டர் உயரத்திற்கு வெடித்துச் சிதறிய கிலவோயா எரிமலை
ஹவாயில் 300 மீட்டர் உயரத்திற்கு வெடித்துச் சிதறிய கிலவோயா எரிமலை
உலகில் அதிகம் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் ஒன்றான கிலவோயா மீண்டும் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இது வரை 23 முறை இந்த எரிமலை வெடித்துள்ளது.
ஹவாய் தீவுகளில் உள்ள ஆறு எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய எரிமலை ஹவாய் தீவுகளில் உள்ளது குறிப்பிடப்பத்தக்கது.
ஹவாய் எரிமலை ஆய்வக கூற்றுப்படி, சில பகுதிகளில் இந்த முறை 300 மீ உயரத்துக்கு குழம்பு வெளிப்பட்டது. இது கிட்டத்தட்ட ஈஃபிள் கோபுரத்தின் உயரம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



