உட்கார்ந்து பார்த்த பார்வையாளர் - நொறுங்கி விழுந்த பழமையான நாற்காலி
உட்கார்ந்து பார்த்த பார்வையாளர் - நொறுங்கி விழுந்த பழமையான நாற்காலி
இத்தாலியில் ஒரு அருங்காட்சியகத்தில் 'வான் கோக்' நாற்காலி பார்வையாளர் ஒருவரால் உடைக்கப்பட்ட காட்சி இது. ஊழியர்கள் பார்க்கும் முன்பே இவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறினர்.
பிரபல ஓவியர் வின்சென்ட் வான் கோக் வரைந்த 'Van Gogh's Chair' ஓவியத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த இருக்கை உருவாக்கப்பட்டிருந்தது. இந்த இருக்கையில் நூற்றுக்கணக்கான மின்னும் கற்கள் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் கலைப்படைப்புகளுக்கு மரியாதை தருமாறு அருங்காட்சியக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



